NATIONAL

அன்வார் இப்ராஹிம் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் !!!

7 மே 2020, 5:12 AM
அன்வார் இப்ராஹிம் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் !!!

கோலா லம்பூர், மே 7:

எதிர் வரும் மே 18-இல் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை எதிர்க்கட்சித் தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று அவரின் முகநூலில் பதிவு செய்தார். இந்த தகவலை நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அன்வார் இப்ராஹிம் கூறினார்.

" பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் நிர்வாகக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வாரிசான், பெர்சத்து கட்சியின் ஒரு பிரிவினர் மற்றும் எல்லா எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

14-வது நாடாளுமன்ற கூட்டத் தொடரின் 2020-ஆம் மூன்றாம் தவணைக்கான முதல் கூட்டம் அதிகாரப்பூர்வமாக மேன்மை தங்கிய மாமன்னர் தொடக்கி வைப்பார். கோவிட்-19 நோய் பரவுவதை தொடர்ந்து ஒரு நாள் நாடாளுமன்றக் கூட்டம் அதிகாரப்பூர்வமாக நிகழ்வுக்கு பிறகு நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.