RENCANA PILIHAN

சிலாங்கூர் டியூடர்: 72,000 மாணவர்கள் பதிந்தனர், மேலும் விண்ணப்பம் செய்யலாம் !!!

30 ஏப்ரல் 2020, 4:43 AM
சிலாங்கூர் டியூடர்: 72,000 மாணவர்கள் பதிந்தனர், மேலும் விண்ணப்பம் செய்யலாம் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 30:

77,399 மாணவர்கள் இணையத்தில் இலவச கல்வி திட்டத்தில் இது வரையில் பதிந்துள்ளனர். ஆண்டு 1 தொடங்கி படிவம் 5 வரை பயிலும் மாணவர்கள் selangortutor.com, வழி பதிந்ததாக யாயாசாான் சிலாங்கூரின் மூத்த இயக்குநர் ஸாஹுரா ஜக்ரி தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 1-இல் தொடங்கிய இந்த இணையக் கல்வி மே 31 வரை நீடிக்கும் என்றும் சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் நல்ல ஒத்துழைப்பு இதற்கு உறுதுணையாக இருக்கிறது என்றார். இது மட்டுமின்றி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

" இணையக் கல்விக்கான விண்ணப்பம் இன்னும் திறந்துள்ளது. யாயாசான் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரில் தொடங்கிய இலவச கல்வியான 'சிலாங்கூர் டியூடர்' திட்டத்தை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி அமைச்சின் பாடத்திட்டத்தை அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த இணையக் கல்வி மாணவர்களுக்கு சிறந்த ஒரு தளமாக அமையும்," என ஸாஹுரா கூறினார்.

பின்வரும் வழிமுறைகளையும் பின்பற்றி

 selangortutor.com : பதியலாம்

1) Layari laman sesawang selangortutor.com

2) Klik butang daftar

3) Pilih nama sekolah dan peringkat

4) Isi maklumat ibu bapa dan anak

5) Klik butiran langganan

6) Pendaftaran berjaya

Cara layari selangortutor.com :

1) Layari laman sesawang selangortutor.com

2) Log masuk

3) Laman Profil

4) Klik modul – pilih subjek

5) Pilih topik

6) Mula membuat latihan

7) Keputusan serta merta

8) klik subjek dan laporan

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.