NATIONAL

சமூக பரிசோதனை திட்டத்தில் அறிகுறி இல்லாத 10 பேரின் தொற்று உறுதி செய்யப்பட்டது!

28 ஏப்ரல் 2020, 5:25 AM
சமூக பரிசோதனை திட்டத்தில் அறிகுறி இல்லாத 10 பேரின் தொற்று உறுதி செய்யப்பட்டது!

ஷா ஆலம், ஏப்.28-

தொற்றுக்கான அறிகுறி இல்லாத எட்டு சம்பவங்கள் உட்பட மொத்த 5,433 மாதிரிகளில் 10 கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“சிலாங்கூரில் உள்ள 6 பகுதிகளில் கடந்த ஏப்ரல் 11 தொடங்கி ஏப்ரல் 23 வரையில் மாநில அரசாங்கத்தின் கோவிட்-19 சமூக பரிசோதனை நடவடிக்கை திட்டத்தின் கீழ் பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார் அவர்.

மொத்தம் 5,433 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 10 தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன. அவர்களில் 8 பேரிடம் தொற்றுக்கான எநதவொரு அறிகுறியும் தென்படவில்லை” என்று அவர் சொன்னார்.

மலேசிய சுகாதார அமைச்சின் முயற்சிக்கு உதவும் நோக்கத்தில், தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் சிலாங்கூர் அரசு இந்த சமூக பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளும் என்று அமிருடின் உறுதியளித்தார். சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பி பணியாளர் குழுவின் (எஸ்டிஎஃப்சி) தரவின் அடிப்படையில் இத்திட்டத்தின் அடுத்த கட்டம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.