ஷா ஆலம், ஏப்.27-
நடமாட்ட கட்டுப்பாடு ஆணை காரணமாக மன அழுத்திற்கு ஆளாகியுள்ளவர்கள் தங்கள் மனக் குமுறல்களையும் பிரச்னைகளையும் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ள தொலைப்பேசி சேவை வாயிலாக வெளிப்படுத்தலாம் என்று சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷேல் இங் மெய் ஸீ கூறினார். வீட்டில் நீண்ட காலம் அடைப்பட்டுள்ளதால், சில நிதிப் பிரசனை, மன அழுத்தம் மற்றும் தனிமையில் வாடிக் கொண்டிருக்கலாம் என்பதால் தங்கள் தரப்பு செகி கல்லூரின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்ச்சியை நடத்தி வருவதாக அவர் சொன்னார்.
“தங்கள் பிரச்னைகளை பகிர்ந்து கொள்ள விரும்புவோர் shorturl.at/ejkmy என்ற அகப்பக்கத்தின் வாயிலாக பதிவு செய்துக் கொள்ளலாம். பதிவு செய்த பின்னர் ஆலோசகர்கள் தங்களுடன் தொடர்புக் கொள்வர்” என்றார் அவர்.
“இந்த கலந்துரையாடல் தொலைப்பேசி அல்லது தகவல் பரிமாற்றம் வாயிலாக நடைபெறும். ஏனெனில் ஒரு சிலர் தகவல் பரிமாற்றத்தின் மூலமாகவே பேச விரும்புகின்றனர்” என்றார்.
இந்த சேவை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் காலை 10 மணி தொடங்கி மாலை மணி 6 வரையில் நடைபெறும்.


