SELANGOR

செந்தோசா சட்ட மன்ற தொகுதியில் துப்புரவு பணிகள்

19 ஏப்ரல் 2020, 3:54 AM
செந்தோசா சட்ட மன்ற தொகுதியில் துப்புரவு பணிகள்
செந்தோசா சட்ட மன்ற தொகுதியில் துப்புரவு பணிகள்
செந்தோசா சட்ட மன்ற தொகுதியில் துப்புரவு பணிகள்

கிள்ளான், ஏப்ரல் 19:

கடந்த ஏப்ரல் 13 தொடங்கி இரண்டு நாட்களாக கிள்ளான் நகராண்மை கழகத்தின் (எம்பிகே) சுற்றுச்சூழல் இலாகா மற்றும் செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் இணைந்து சுற்று வட்டார அடுக்குமாடி குடியிருப்புகளை கழுவும் பணியில் ஈடுபட்டனர். செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் எம்பிகே சுற்றுச்சூழல் இலாகாவின் இயக்குநர் ஸைரீலால் அமாட் ஜைனூடின் இந்த நடவடிக்கைக்கு நேரிடையாக களத்தில் இறங்கினர்.

செந்தோசா சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பின்வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் இதில் அடங்கும்;-

1. புக்கிட் திங்கி அடுக்குமாடி 1

2. தாமான் சீ லியோங் அடுக்குமாடி

3. ஸ்ரீ புரோட்டோன் செந்தோசா அடுக்குமாடி

4. வீலா செந்தோசா அடுக்குமாடி

குடியிருப்புகள் மட்டுமின்றி அருகாமையில் இருக்கும் கால்வாய்களும் எம்பிகே பணியாளர்களால் சுத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஏப்ரல் 15-இல் எம்பிகேவின் சுகாதார இலாகா பணியாளர்கள் கிருமி நாசினியை மேற்கண்ட குடியிருப்புகளில் தெளித்தனர். செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் எம்பிகேவின் அதிரடி நடவடிக்கையைக் கண்டு பொது மக்கள் பெருமிதம் கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.