NATIONAL

சுட்டெரிக்கும் வெயிலில் சுய பாதுகாப்பு ஆடையை அணிந்து வீடு வீடாக செல்வது மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு தடையல்ல !!!

12 ஏப்ரல் 2020, 11:11 AM
சுட்டெரிக்கும் வெயிலில் சுய பாதுகாப்பு ஆடையை அணிந்து வீடு வீடாக செல்வது மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு தடையல்ல !!!
சுட்டெரிக்கும் வெயிலில் சுய பாதுகாப்பு ஆடையை அணிந்து வீடு வீடாக செல்வது மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு தடையல்ல !!!

காஜாங், ஏப்ரல் 12:

சிலாங்கூர் மாநில கோவிட்-19 பரிசோதனை பணிக்குழு (செல்கேர்) சுட்டெரிக்கும் வெயிலில் சுய பாதுகாப்பு ஆடையை (பிபிஇ) அணிந்து கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று பரிசோதனை நடவடிக்கையை மேற்கொள்வது உண்மையில் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது.

சிலாங்கூர் இன்று செய்தி பணியாளர்கள் இந்த பரிசோதனை நடவடிக்கையை கவனித்து வருகின்றனர். காலை 8 மணி தொடங்கி வீடு வீடாக சென்று பரிசோதனையை மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மேற்கொண்டு வரும் போது ஒருவருக்கு ஒருவர் தன்னம்பிக்கை வார்த்தைகளை சொல்லி பணியினை செவ்வனே செய்து வருகின்றனர்.

பொது மக்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கினாலும், உண்மையிலே சுட்டெரிக்கும் வெயில்தான் மிகப் பெரிய சவாலாக அமைந்துள்ளது. வெயில் தாக்கத்தால் வேர்வை கொட்டும் வேளையில், சிலர் வெப்ப சூழ்நிலையில் மயங்கி விழும் அளவுக்கு இருக்கிறது.

மருத்துவ அதிகாரியான டாக்டர் நூர்பித்ரி புத்ரியான்தி இந்த சூழ்நிலை தமது வாழ்நாளில் முக்கியமான அனுபவம் என வர்ணித்தார். உண்மையில் மிகவும் களைப்பாக இருந்தாலும் பொது மக்களுக்கு உதவும் போது மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியாகவும் இருக்கிறது என்றார் அவர்.

Pasukan petugas perubatan menjalankan ujian saringan Covid-19 kepada penduduk di Hulu Langat pada 12 April 2020. Ujian itu dilakukan selepas pengumuman Dato' Menteri Besar Dato' Seri Amirudin Shari untuk menjalankan saringan besar - besaran di zon merah di seluruh Selangor. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.