RENCANA PILIHAN

ஏப்ரல் 1 தொடங்கி ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலம் கட்டண அறிக்கை பெறலாம்

6 ஏப்ரல் 2020, 7:30 AM
ஏப்ரல் 1 தொடங்கி ஆயர் சிலாங்கூர் வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப் மூலம் கட்டண அறிக்கை பெறலாம்

ஷா ஆலம், ஏப்.6-

ஏப்ரல் முதல் நாள் தொடங்கி சிலாங்கூர் தண்ணீர் நிர்வாக நிறுவன (ஆயர் சிலாங்கூர்) வாடிக்கையாளர்கள் தங்கள் கட்டண அறிக்கைகளை வாட்ஸ் அப் வழி பெறும் தேர்வை செய்யலாம் என்று அதன் நிறுவனத் தொடர்பு பிரிவுத் தலைவர் அப்துல் ஹாலிம் மாட் சோம் கூறினார்.

பயனீட்டாளர்கள் இந்த சேவையைப் பெற தங்கள் மின் கட்டண விவரங்களை https://update.airselangor.com. என்ற இணையத் தளம் வழி புதுப்பித்தால் போதுமானது என்றார் அவர்.

வாட்ஸ் அப் வழி கட்டண அறிக்கைகளைப் பெற விரும்பும் பயனீட்டாளர்கள் தங்கள் தொலைப்பேசி எண்கள் சரியாக இருப்பதையும் அது தகவல்களைப் பெறும் வசதியைக் கொண்டுள்ளதா என்பதையும் உறுதி செய்வது அவசியம் ஆகும் என்று அவர் சொன்னார். 2018ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ள மின் கட்டண அறிக்கை நடைமுறையானது வாடிக்கையாளர்களுக்கு மின் அஞ்சல் அல்லது பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி வழியாகவும் அனுப்பப்பட்டு வருகிறது

இச்சேவை குறித்து மேலும் விவரங்களைப் பற்றி அறிய விரும்பும் வாடிக்கையாளர்கள் 019-2800919 அல்லது 019-2816793 என்ற எண்களில் வாட்ஸ் அப் மூலமாக அல்லது ஆயர் சிலாங்கூர் முகநூல் மற்றும் www.airselangor.com என்ற அகப்பக்கத்தையும் வலம் வரலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.