SELANGOR

5000 முகமூடிகளை மருத்துவமனை மற்றும் கிளினிக் ஆகியவற்றிற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் விநியோகம்

4 ஏப்ரல் 2020, 7:18 AM
5000 முகமூடிகளை மருத்துவமனை மற்றும் கிளினிக் ஆகியவற்றிற்கு ஆட்சிக்குழு உறுப்பினர் விநியோகம்

ஷா ஆலம், ஏப்ரல் 4:

சிலாங்கூர் மாநிலத்தில் இயங்கும் 21 மாவட்ட சுகாதார கிளினிக்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு முகமூடிகளை மாநில சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் விநியோகம் செய்தார். கோவிட்-19 நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முன்னணி வரிசையில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு டாக்டர் சித்தி மாரியா வழங்கினார். இந்த முகமூடிகளை சிலாங்கூர் சுகாதார இலாகாவின் மூலம் எல்லா கிளினிக் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

" முன்னணி வரிசையில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்கள் இந்த நோயை கட்டுப்பாட்டில் கொண்டு வர போராடும் அனைவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பணியாளர்கள் அனைவரும் மனவலிமை மற்றும் நல்ல சுகாதார நிலையில் இருக்க இறைவனை வேண்டுகிறேன்," என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.