RENCANA PILIHAN

மூன்று மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பை பசுமையாக்க ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்வம் !!!

1 ஏப்ரல் 2020, 1:21 AM
மூன்று மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பை பசுமையாக்க ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர்வம் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 1:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் மூன்று மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்பை பசுமையாக்கும் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில வீடமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் ஹானிஸா தல்ஹா தெரிவித்தார். இதன் அறிமுக திட்டத்தை தாமான் இண்டஸ்திரி அம்பாங், தாமான் காஜாங் உத்தாமா மற்றும் பிகேஎன்எஸ் பிஜேஎஸ் 2 பெட்டாலிங் ஜெயா ஆகிய அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

" இந்த பசுமையாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின் மூலம் சுற்று சூழல் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கும். வாழ்க்கை தரம் மேலும் சிறப்பாக இருக்கும். ஆகவே, இந்த அறிமுகத் திட்டம் வெற்றி பெற வேண்டும். இதன் பின்னர் மற்ற இடங்களிலும் இத்திட்டம் தொடரும்," என்று தமது அகப்பக்கத்தில் ஹானிஸா தல்ஹா பதிவு செய்துள்ளார்.

சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்துரிமை வாரியம் மற்றும் உள்நாட்டு பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த பசுமை திட்டத்தை தீட்டியது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.