NATIONAL

பிகேபி: ஏப்ரல் 1-இல் முதல் வணிக நேரம் காலை 8 தொடங்கி இரவு 8 மணி வரை ஆகும்

30 மார்ச் 2020, 7:22 AM
பிகேபி: ஏப்ரல் 1-இல் முதல் வணிக நேரம் காலை 8 தொடங்கி இரவு 8 மணி வரை ஆகும்

புத்ராஜெயா, மார்ச் 30:

எதிர் வரும் ஏப்ரல் 1 தொடங்கி நடமாடும் கட்டுபாடு ஆணையின் (பிகேபி) இரண்டாம் கட்டத்தில் எல்லா வியாபார தளங்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறந்து இருக்க முடியும் என பாதுகாப்பு பிரிவின் மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இதில் பேரங்காடிகள் மற்றும் எண்ணெய் நிலையங்களும் அடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார். மேலும் பிகேபி காலகட்டத்தில் உணவகங்கள் மற்றும் சிறிய கடைகளும் இதே நேரத்தை பின்பற்றி நடக்க வேண்டும் என்று இஸ்மாயில் சப்ரி இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற சிறப்பு அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இவ்வாறு அவர் விவரித்தார்.

" அரசாங்கம் பொது மக்களை இணையத்தின் வழி பொருட்களை வாங்க ஊக்குவிக்கிறது. பொருட்களை அனுப்பும் பணியாளர்களை நேரடியாக சந்திக்க வேண்டாம்," என்று பொது மக்களை வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.