NATIONAL

3,900 உலு லங்காட் மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு?

29 மார்ச் 2020, 12:20 PM
3,900 உலு லங்காட் மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு?

ஷா ஆலம், மார்ச் 29:

சுங்கை லூய், உலு லங்காட் 21 மைல் தொடங்கி 24 மைல் வரை அரசாங்கம் கெடுபிடியான நடமாடும் கட்டுபாடு ஆணையை (பிகேபிடி) இன்று நள்ளிரவு ஆரம்பம் ஆகிறது என்று பாதுகாப்பு பிரிவின் மூத்த அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். இந்த நடவடிக்கை சுகாதார அமைச்சிடம் கலந்துபேசி முடிவு எடுக்கப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார். சுங்கை லூய் மாஹாட் தாபீஸ் அன்நபாவியா 274 மாணவர்களில் 71 பேருக்கு கோவிட்-19 நோய் தொற்றியது தொடர்பில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

பிகேபிடி ஏப்ரல் 13 வரை நீடிக்கும் என்றும் இரண்டு பூர்விகக்குடிகளின் கிராமங்களும், ஏழு மலாய்க்காரர்களின் கிராமங்களை சேர்ந்த மொத்தம் 3918 பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.