SELANGOR

ஆலையில் இருந்து வெளிவரும் எண்ணெய் கசிவே நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுத்தப்பட்ட காரணம்

27 மார்ச் 2020, 2:42 PM
ஆலையில் இருந்து வெளிவரும் எண்ணெய் கசிவே நீர் சுத்திகரிப்பு நிலையம் நிறுத்தப்பட்ட காரணம்

ஷா ஆலம், மார்ச் 27:

கட்டிட நிர்மாணிப்பு பொருட்கள் தயாரிக்கும் ஆலையில் இருந்து கசிந்த எண்ணெய் தான்  சிலாங்கூர் ஆறு சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கை நிறுத்தப்பட்ட காரணம் என்று சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் (லுவாஸ்) அறிவித்துள்ளது. 205 லிட்டர் அளவிலான எண்ணெய் கசிவ சிலாங்கூர் ஆற்றில் கலந்துள்ளதாக அந்த நிறுவனம் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

லுவாஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் எண்ணெய் மற்றும் கிரீஸ் மாதிரிகளை விசாரணைக்கு எடுத்து வந்துள்ளனர். மேலும், எண்ணெய் கசிவு சிலாங்கூர் ஆற்றில் கலக்காமல் இருக்க தடுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.