NATIONAL

நடமாடும் கட்டுப்பாடு ஆணையை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது !!!

25 மார்ச் 2020, 5:36 AM
நடமாடும் கட்டுப்பாடு ஆணையை ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது !!!

புத்ராஜெயா, மார்ச் 25:

நடமாடும் கட்டுப்பாடு ஆணையை ஏப்ரல் 14 வரை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ  முஹீடின் யாசின் தெரிவித்தார்.

இன்று பிற்பகல் தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சிறப்பு உரையின் போது இதனை அறிவித்த அவர், கோவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அரசாங்கம் எதிர்பார்த்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எனக்கு விளக்கத்தை அளித்தார்கள். அதில், தற்போதைய நிலவரப்படி கோவிட்-19-இன் புதிய பாதிப்புகள் இன்னும் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது”.

“புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுவதற்கு முன்பு, இந்த நிலை சில காலம் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசாங்கம் நடமாடும் கட்டுப்பாடு ஆணையை நீண்ட காலத்திற்கு தொடர வேண்டிய அவசியம் உள்ளது. இதனால், நடமாடும் கட்டுப்பாடு காலம் ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது” என்று அவர் மேலும் கூறினார்.

முஹீடின,  மக்களை வீட்டில் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.