SELANGOR

ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து & பிஜே மாநகர பேருந்து சேவைகள் நாளை நிறுத்தப்படும் !!!

23 மார்ச் 2020, 3:35 PM
ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து & பிஜே மாநகர பேருந்து சேவைகள் நாளை நிறுத்தப்படும் !!!

ஷா ஆலம், மார்ச் 23:

கோவிட்-19 வைரஸ் நோய் பரவி வருவதால் ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்து மற்றும் பிஜே மாநகர பேருந்து சேவைகள் நாளை தொடங்கி நிறுத்தி வைக்க படவிருக்கிறது என்று சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்ற  ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு எங் ஸீ ஹான் கூறினார். இதில் 43 வழிகள் அடங்கிய 138 ஸ்மார்ட் சிலாங்கூர் பேருந்துகள் மற்றும் 6 வழிகள் அடங்கிய 32 பிஜே மாநகர பேருந்துகள் ஆகியவை அறிவிக்கப்படாத திகதி வரை சேவைகள் நிறுத்தி வைக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

" நடமாடும் கட்டுபாடு ஆணையை பொது மக்கள் சரியான முறையில் கடைபிடிக்க இந்த நடவடிக்கை உதவும். மாநில அரசாங்கம் பொது மக்களின்  ஒத்துழைப்பை பெரிதும் எதிர் பார்க்கிறது. வெளியில் நடமாட்டத்தை குறைத்தால் நோயை கட்டுப்படுத்த முடியும்," என்று தமது அறிக்கையில் ஸீ ஹான் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.