NATIONAL

ராணுவம் களம் இறங்கியதும் மிரண்டு போன மக்கள் ஆனையைப் பின்பற்றுகின்றன!

22 மார்ச் 2020, 11:53 PM
ராணுவம் களம் இறங்கியதும் மிரண்டு போன  மக்கள் ஆனையைப் பின்பற்றுகின்றன!

கோலாலம்பூர், மார்ச் 23-

நடமாட்ட கட்டுப்பாடு ஆணைக்கு ஏற்ப மக்களின் நடமாட்டத்தைக் குறைக்க பணிக்கமர்த்தப்பட்ட காவல் துறையினருக்கு மலேசிய ராணுவ படை துணைப் புரியத் தொடங்கியதும் ஆக்கப்பூர்வ பயன் கிடைத்துள்ளது, போலீசாருக்கு ராணுவம் நேற்று துணைப் புரியத் தொடங்கியது முதல் மக்கள் சிறிது அச்சமடைந்ததுடன் அவர்களின் நடமாட்டமும் குறைந்துள்ளது.

இந்நடவடிக்கை காரணமாக கோவிட்-19 பரவலைத் தடுக்க மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க எடுக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாடு ஆணையைப் பின்பற்றும் போக்கு உயர்ந்தது. நாட்டின் தலைநகரம் உட்பட முக்கிய நகரங்களில் பெர்னாமா மேற்கொண்ட கண்ணோட்டத்தில் அனைத்து சாலைகளிலும் காலை நேரங்களைத் தவிர்த்து இதர நேரங்களில் போக்குவரத்து சமூகமாகவும் நெரிசலின்றி இருப்பது தெரிய வந்துள்ளது. அதே வேளையில், குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.