NATIONAL

முகநூலில் மாமன்னரை அவமதித்தனர் மேலும் இருவர் கைது

2 மார்ச் 2020, 6:33 AM
முகநூலில் மாமன்னரை அவமதித்தனர் மேலும் இருவர் கைது

கோலாலம்பூர், மார்ச் 2-

முகநூலில் மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்- முஸ்தாபா பில்லா ஷாவை அவமதித்த காரணத்திற்காக சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இது வரை இவ்விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

அந்த இரு ஆடவர்களும் நேற்று முன் தினம் முறையே சபா, சண்டக்கான் மற்றும் சிலாங்கூர், சுங்கை பூலோவில் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புனாய்வு துறை இயக்குநர் டத்தோ ஹூசிர் முகமது கூறினார்.

“இவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்படுவர். இவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்களா, இல்லையா என்பதை சட்டத் துறை அலுவலகம் முடிவு செய்யும் “ என்றார் அவர்.

“மாமன்னரை அவமதிக்கும் செயலைத் தவிர்ப்பதற்காக போலீஸ் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்” என்று இங்கு புக்கிட் அமானில் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.