SELANGOR

வீடியோ விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்படத் தயார்! - மிஷெல்

14 பிப்ரவரி 2020, 4:56 AM
வீடியோ விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்படத் தயார்! - மிஷெல்

சுபாங் ஜெயா, பிப்.14-

எம்பிஎஸ்ஜே அமலாக்க அதிகாரி ஒருவருக்கும் மூத்த குடிமகன் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை விவகாரத்திற்கு தீர்வு காண தாம் மத்தியஸ்தராக செயல்படத் தயாராக இருப்பதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் இங் மெய் ஸி கூறினார்.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இவ்விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க சம்பந்தப்பட்ட இரு தரப்பும் சமாதானம் பேச முன் வர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரத்தில் தாம் எந்தவொரு தரப்பையும் கூறைக் கூற விரும்பவில்லை. மாறாக, இது போன்ற சம்பவம் மீண்டும் நிகழாதிருக்க இதை ஒரு படிப்பினையாகக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

அமலாக்க அதிகாரி ஒருவர் மூத்த குடிமகண் ஒருவரிடம் கடுமையாக நடந்து கொள்ளாத போதிலும் சினமுற்ற அந்த முதியவர் குடையால் அந்த அதிகாரியைத் தாக்கியதால், நிதானமிழந்த அதிகாரி அம்முதியவரை குத்தியதால், தரையில் விழுந்த முதியவரின் தலையில் காயமேற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. இக்காணொளி தற்போது சமூக ஊடங்களில் பரவலாக வைரலாகி வருகின்றன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.