SELANGOR

வேலையில்லாதோர் விகிதாச்சாரம் குறைக்கப்படும்! சிலாங்கூர் நம்பிக்கை

29 ஜனவரி 2020, 3:09 AM
வேலையில்லாதோர் விகிதாச்சாரம் குறைக்கப்படும்! சிலாங்கூர் நம்பிக்கை

ஷா ஆலம், ஜன.29-

மாநிலத்தின் வேலையில்லாதோர் விகிதாச்சாரத்தை இவ்வாண்டு 2.5 விழுக்காடாக குறைக்க சிலாங்கூர் நம்பிக்கை கொண்டுள்ளது என்று இளைஞர் மற்றும் விளையாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓஸ்மான் தெரிவித்தார்.

“இந்த இலக்கை அடையும் நோக்கத்தில் சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சி மற்றும் மினி வேலை வாய்ப்பு கண்காட்சி ஆகியவற்றை ஏற்பாடு செய்வதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது” என்றார் அவர்.

“வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் மெகா வேலை வாய்ப்பு கண்காட்சியின் போது சுமார் 5,000 வேலை வாய்ப்புகளும் சட்டமன்ற தொகுதி அளவில் மேற்கொள்ளப்படவிருக்கும் மினி வேலை வாய்ப்பு கண்காட்சிகளின் போது ஓராயிரம் வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும்” என்று அவர் சொன்னார்.

“2016ஆம் ஆண்டில் 3.2 விழுக்காடாக இருந்த வேலையில்லாதோர் விகிதாச்சாரம், 2017,2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் 2.8 விழுக்காடாக குறைந்தது” என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.