NATIONAL

சீனப் புத்தாண்டு: மந்திரி பெசார் தம்பதியர் வீடுகளுக்கு வருகையளிக்கும் பாரம்பரியம் தொடர்கிறது!

24 ஜனவரி 2020, 6:57 AM
சீனப் புத்தாண்டு: மந்திரி பெசார் தம்பதியர் வீடுகளுக்கு வருகையளிக்கும் பாரம்பரியம் தொடர்கிறது!

செலாயாங், ஜன.24-

சுங்கை துவா தொகுதியில் உள்ள தியோங் ஹுவா மக்களின் இல்லங்களுக்கு சீனப் புத்தாண்டு காலத்தில் வருகையளிக்கும் பாரம்பரியத்தை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இவ்வாண்டும் தொடர்கிறார். நாளை கொண்டாடப்படும் புத்தாண்டு பெருநாளை முன்னிட்டு ஆரஞ்சு பழங்களையும் ஆங் பாவ் பண முடிப்புகளையும் வழங்கும் நிகழ்ச்சியில் மந்திரி பெசாருடன் அவரது துணைவியாரும் பங்கேற்றார்.

இல்லங்களுக்கு வருகையளிப்பதற்கு முன்னர், செலாயாங் பாசா பாகியில் உள்ள வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆரஞ்சு பழங்களை அவர் எடுத்து வழங்கினார். இத்தருணத்தில் சிலாங்கூர் வாழும் அனைத்து மக்களுக்கு குறிப்பாக தியோங் ஹுவா மக்களுக்கு இனிய சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்றார் அவர்.

“இந்த புத்தாண்டு கொண்டாட்டமானது நமக்கு புதுத் தெம்பையும் ஊக்கத்தையும் அளிக்கும் என்று நம்புவோம்” என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.