NATIONAL

இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர்!

10 ஜனவரி 2020, 4:47 AM
இடைக்கால கல்வி அமைச்சராக பிரதமர்!

ஷா ஆலம், ஜன.10-

கல்வி அமைச்சர் பதவியில் இருந்து டாக்டர் மஸ்லீ மாலேக் கடந்த ஜனவரி 3ஆம் தேதி விலகியதைத் தொடர்ந்து பிரதமர் துன் டாக்டர் மகாதீர் இடைக்கால கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இம்முடிவிற்கு இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை கூறியது.

இவரது நியமனம் ஜனவரி 3 ஆம் தேதி நடப்புக்கு வந்ததாகவும் புதிய கல்வி அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படும் வரை டாக்டர் மகாதீர் இப்பதவியில் நீடிப்பார் என்று அவ்வறிக்கை தெரிவித்தது. புத்ராஜெயாவில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி தமது கல்வி அமைச்சர் பதவியைத் துறப்பதாக டாக்டர் மஸ்லீ அறிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.