SELANGOR

தாமான் மெலாவாத்தி தமிழ்ப் பள்ளியின் 60 மாணவர்களுக்கு புத்தகப் பைகள்

8 ஜனவரி 2020, 4:39 PM
தாமான் மெலாவாத்தி தமிழ்ப் பள்ளியின் 60 மாணவர்களுக்கு புத்தகப் பைகள்

புக்கிட் அந்தாராபங்சா, ஜனவரி 8:

கோம்பாக் நாடாளுமன்ற /சுங்கை துவா சட்டமன்ற இந்திய சமூக தலைவர் எஸ். மணிவண்ணன் ஏற்பாட்டில் தாமான் மெலாவாத்தி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 60 மாணவர்களுக்குப் புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்களோடு கம்போங் ஃபாஜார் பிரதிநிதி சுரேனும் கலந்து கொண்டார். இப்பள்ளி மாணவர்கள் புத்தகப் பைகள் பெறுவதற்கு ஏற்பாடு செய்த மணிவண்ணனுக்கு தலைமையாசிரியர் திருமதி யசோதா நன்றி தெரிவித்தார்.

புக்கிட் அந்தாரா பங்சா சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்ட தலைமையாசிரியர் இப்பள்ளி மாணவர்களுக்கான இதுபோன்ற உதவிகள் இனி வரும் காலங்களிலும் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.