SELANGOR

புக்கிட் காசிங் வட்டாரத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்!  

8 ஜனவரி 2020, 6:23 AM
புக்கிட் காசிங் வட்டாரத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்!   

ஷா ஆலம், ஜன.8-

உள்ளூர் திட்டங்கள் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் புக்கிட் காசிங் வட்டார மக்கள் நல்ல அடிப்படை வசதிகளைக் கொண்டிருப்பர் என்று கூறப்படுகிறது. இங்கு பெரும்பாலான பகுதிகளில் நடை பாதைகளோ அல்லது மேம்பாலங்களோ இல்லை. இதனால் ஆபத்துகள் எளிதாக நடக்கலாம் என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ராஜிவ் ரிக்க்ஷாக்காரன் தெரிவித்தார்.

அதே வேளையில், பயணச் சேவையை அதிகரிக்கும் பொருட்டு பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சின் ஒத்துழைப்பை நாடவிருப்பதாக அவர் மேலும் சொன்னார்.

வீதியோரங்களில் உரிமம் இன்றி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களைப் பொருத்தமான இடங்களுக்கு மாற்றுவதோடு அவர்களுக்கு உரிமம் பெற்றுக் கொடுக்கும் முயற்சியையும் தான் மேற்கொள்ளப் போவதாக ராஜிவ் கூறினார்.

உருமாற்றத் திட்டத்திற்காக பொது மக்களிடமிருந்து கருத்துகளைத் தாம் பெரிதும் வரவேற்பதாகக் குறிப்பிட்டார். இவரின் மின் அஞ்சல் முகவரி rajiv@bukitgasing.my என்பதாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.