NATIONAL

மலேசியாவிற்கு வருகைப் புரியும் ஆண்டு: 30 மில்லியன் சுற்றுப் பயணிகளை மலேசியா கவரும்!

27 டிசம்பர் 2019, 3:27 PM
மலேசியாவிற்கு வருகைப் புரியும் ஆண்டு: 30 மில்லியன் சுற்றுப் பயணிகளை மலேசியா கவரும்!

கோலாலம்பூர், டிச.27-

2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு 30 மில்லியன் அனைத்துலக சுற்றுப் பயணிகள் மற்றும் அதன் மூலம் 100 பில்லியன் ரிங்கிட் வருவாய் என இலக்கை அடைய பல்வேறு சுற்றுலா நிகழ்ச்சிகள் நாடு ஏற்பாடு செய்யவிருக்கிறது.

இந்தச் சுற்றுலா திட்டங்கள் குறித்து ஆசியா மற்றும் ஐரோப்பாவிலும் பிரச்சாரம் செய்யப்படும் என்று மலேசிய சுற்றுலா துறை தலைமை இயக்குநர் டத்தோ மூசா யூசோப் கூறினார். ஜனவரி மாதத்தில் இந்தியா, புருணை மற்றும் ஸ்பெய்ன், பிப்ரவரியில் இத்தாலி, மார்ச் மாதத்தில் ஜெர்மன் போன்ற நாடுகளில் இருந்து மேலும் அதிகமான சுற்றுப் பயணிகளைக் கவரவும் 2020 மலேசியாவிற்கு வருகைப் புரியும் திட்டம் குறித்து அடுத்தாண்டு முழுமையும் பிரச்சாரம் செய்யப்படும் என்றார் அவர்.

2020 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு குறித்து 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லண்டனில் தொடங்கிய பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதால அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.