SELANGOR

எஸ்யுகே சமுக நல கிளப்: 100 பள்ளிப் பைகளை வழங்கியது!

27 டிசம்பர் 2019, 3:25 PM
எஸ்யுகே சமுக நல கிளப்: 100 பள்ளிப் பைகளை வழங்கியது!

ஷா ஆலம், டிச,27-

மாநில அரசு செயலக (எஸ்யுகே) அலுவலக உதவியாளர் சமூகநல கிளப் செல்கேர் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அக்கிளப்பின் உறுப்பினர்களின் 100 சிறார்களுக்கு பள்ளிப் பைகள் மற்றும் பள்ளி உபகரணப் பொருட்கள் வழங்கியது.

2020 மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் திட்டத்தின் இந்நிகழ்ச்சி சுல்தான் சாலாஹுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டடத்தில் உள்ள டேவான் ஜுப்ளி பேராக் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இந்த உதவிப் பொருட்களைப் பெற்றவர்களில் புக்கிட் பண்டாராயாவைச் சேர்ந்த 16 பூர்வக் குடியினரும் அடங்குவர் என்று துணை அரசாங்க செயலாளர் (நிர்வாகம்) டத்தோ ஜமானி அகமது மன்சோர் கூறினார்.

இந்த உதவியானது பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளை அடுத்தாண்டு பள்லித் தவணைக்குத் தயார்படுத்தும் கிளப் உறுப்பினர்கள் மற்றும் ஏழ்மை நிலையில் இருப்போரின் நிதிச் சுமையைக் குறைத்திருக்கும் என நம்புவதாக அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.