RENCANA PILIHAN

மன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் உரிமை நிலைநாட்டப்படும்! -மந்திரி பெசார்

11 டிசம்பர் 2019, 2:17 AM
மன்னர் மற்றும் மலாய் ஆட்சியாளர்களின் உரிமை நிலைநாட்டப்படும்! -மந்திரி பெசார்

கிள்ளான், டிச.11

மலாய் ஆட்சியாளர்களின் மாண்பு, மலாய்க்காரர்களின் சிறப்பு அந்தஸ்து மற்றும் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் பெற்றிருப்பது போல தேசிய மொழியாக மலாய் மொழி ஆகியவற்றைத் தற்காக்கப் போவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

இம்மாநில மக்கள் ஒற்றுமையாக இருப்பது மிக அவசியம். அமைதியான சூழலில் தொடர்ந்து முன்னேறுவது முக்கியம் என்றும் அவர் கூறினார். ஸூரா அஸ்-சாஃப் நான்காவது வாக்கியத்தில் குறிப்பிட்டிருக்கும் "புஞ்ஞானும் மார்சஸ்" போன்று அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றார் மந்திரி பெசார்.

"வலுவான ஒரு கட்டடம் போன்று அவர்கள் கட்டொழுங்குமிக்க அணியினராகத் திகழ்கின்றனர்" என்று இங்குள்ள அலாம் ஷா அரண்மனையில் சிலாங்கூர் சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷாவின் 74 ஆவது பிறந்தநாளையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் அமிருடின் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.