NATIONAL

யூசுப் ராவுத்தர் மீண்டும் புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டார் !!!

10 டிசம்பர் 2019, 10:09 AM
யூசுப் ராவுத்தர் மீண்டும் புக்கிட் அமானுக்கு அழைக்கப்பட்டார் !!!

புக்கிட் அமான், டிசம்பர் 10:

டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார் அளித்த யூசுப் ராவுத்தர் இன்று மீண்டும் புக்கிட் அமானில் வரவழைக்கப் பட்டார்.

இன்று நண்பகலில் போலீஸ் தலைமையகம் வந்த அவருடன் ஒரு பெண்ணும் இருந்தார். அவர் யூசுப் ராவித்தரின் உறவினர் என்றும் தெரிவிக்கப்பட்டது.  இருந்தாலும், அவரின் வழக்குரைஞர் ஹனிப் கத்ரி அப்துல்லா உடன்வரவில்லை.

நேற்று விசாரணை முடிவடையவில்லை என்றும் அதனால்தான் யூசுப் ராவுத்தர் இன்று மீண்டும் வந்திருப்பதாக ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். ஆனல், உடன் வந்துள்ள மற்றொரு சாட்சி யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

கடந்த  2018 அக்டோபர் 2-இல், கெஅடிலான்  தலைவர் டத்தோ ஸ்ரீ  அன்வார் இப்ராகிம் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த புதன்கிழமை சத்திய பிரமாணம் ஒன்றைச் செய்தார். பிறகு போலீஸ் புகார் ஒன்றையும் செய்திருந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.