NATIONAL

பி40 தேவையை மைசலாம் நிறைவு செய்ய முடியாது!

5 டிசம்பர் 2019, 12:06 AM
பி40 தேவையை மைசலாம் நிறைவு செய்ய முடியாது!

கோலாலம்பூர், டிச.5-

தேசிய சுகாதார பாதுகாப்புத் திட்டத்தின் (மைசலாம்) அணுகூலங்கள் பி40 தரப்பினரின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு போதுமானது அல்ல என்றும் இத்திட்டத்தின் கீழ் மீட்பு விகிதம் அதிகமாகப் பதவு செய்துள்ளது என்றும் ஆய்வாளர் ஒருவர் கருத்துரைத்தார்.

இத்திட்டத்தின் அணுகூலங்கள் குறிப்பிட்ட வரையரை மட்டுமே உள்ள வேளையில், அரசாங்க காப்புறுதிக்கான இழப்பீடு கோரிக்கை அதிகளவில் இருப்பதாக அல்ம்ஸ் அண்ட் கோ நிறுவனத்தின் வர்த்தக பங்காளி டாக்டர் ஸ்காஞ்ச் கூறினார்.

இக்காப்புறுதி திட்டம் 36 கடுமையான நோய்களுக்கு மட்டுமே உள்ள நிலையில், பி40 தரப்பினர் எதிர்நோக்கும் மருத்துவ சவால்கள் மிகவும் பெரியது. எனவே, இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே இங்கு எழுந்துள்ள கேள்வியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

2019 மலேசிய காப்புறுதி ஹைலைட்ஸ் ஏற்பாட்டிலான நூல் வெளியீட்டிற்கு பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.