PBT

14 புதிய கட்டணம் செலுத்தும் வாகன நிறுத்துமிடப் பகுதிகள்!

27 நவம்பர் 2019, 7:20 AM
14 புதிய கட்டணம் செலுத்தும் வாகன நிறுத்துமிடப் பகுதிகள்!

பெட்டாலிங் ஜெயா, நவ.27-

கட்டணம் செலுத்தும் புதிய 14 வாகன நிறுத்துமிடப் பகுதிகளை டிசம்பர் முதல் தேதி அமல்படுத்தவிருப்பதாக பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றம் அறிவித்தது.

மாநகராட்சிக்கு உட்பட்ட 63 சாலைப் பகுதிகள் இந்த அமலாக்கத்தில் உட்படுத்தப்படும் என்று பெட்டாலிங் ஜெயா டத்தோ பண்டார் முகமது சாயுத்தி பாக்கார் கூறினார்.

செக்ஸன் 5, பிஜேஎஸ் 1, பிஜேஎஸ் 3(தாமான் ஸ்ரீமஞ்சா), பிஜேஎஸ் 5 (பூசாட் டாமன்சாரா சிசி), பிஜேஎஸ் 10, பிஜேயு 1ஏ ஆரா டாமன்சாரா , டத்தாரான் ஆரா டாமன்சாரா மற்றும் என்ஜேஎக்ஸ் வர்த்தக மையம் ஆகிய பகுதிகள் அவற்றுள் அடங்கும் என்று அவர் சொன்னார்.

எம்பிபிஜே தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.