NATIONAL

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மொத்தம் 37 தேர்தல் குற்றங்கள்

8 நவம்பர் 2019, 2:56 PM
தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மொத்தம் 37 தேர்தல் குற்றங்கள்

பொந்தியான், நவம்பர் 8:

நவம்பர் 2 முதல் 6 வரையிலும் நடைபெற்ற தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல் பிரச்சாரக் காலத்தில் மொத்தம் 37 தேர்தல் குற்றங்கள் தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகையில்,  பிரச்சாரப் பொருட்களை நிறுவுவதில் தேசிய முன்னணி 20 தவறுகளைச் செய்துள்ளதாகவும்அதனைத் தொடர்ந்து நம்பிக்கைக் கூட்டணி மற்றும் கெராக்கான் கட்சி 5 தவறுகளைச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆத்திரமூட்டும்  தகவல் இல்லாத மூன்று பிரச்சாரப் பொருட்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்கிடையில்அமானா கட்சித் துணைத் தலைவர்வேளாண்மை மற்றும் வேளாண் தொழில்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சலாஹுடின் அயோப் மீது மொத்தம் ஆறு காவல் துறை புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.