NATIONAL

தீபத்திருநாளில் சகோதரத்துவம் வலுப்பெறட்டும்! - அமைச்சர் ஜுரைடா

27 அக்டோபர் 2019, 2:08 AM
தீபத்திருநாளில் சகோதரத்துவம் வலுப்பெறட்டும்! - அமைச்சர் ஜுரைடா

புத்ராஜெயா , அக்டோபர் 26:

தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து இந்து பெருமக்களுக்கும் வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஹாஜா ஜுரைடா கமாருடின் தமது இனிய தீபத்திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் மலேசியாவில் இனங்களுக்கு மத்தியில் நிலவும் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் தொடர்ந்து வலுப்பெறுவதற்கு இந்தத் திருநாளை அனைவரும் ஒற்றுமை உணர்வோடு கொண்டாடி மகிழ்வர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தீபாவளி திருநாளானது இருளை அகற்றி ஒளியைப் பெறுவது போல் தீமைகளை நன்மைகளால் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பதை நினைவுறுத்துகிறது என்றார் அவர். மலேசிய மக்கள் அனைவரும் குறிப்பாக பி40 மற்றும் எம்40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு வாங்கும் சக்திக்கேற்ற வீடுகளைத் தயார் செய்யும் பெரும் பொறுப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

சமயம் மற்றும் இனம் ஆகிய எல்லைகளைக் கடந்து வீடமைப்பை உட்படுத்தும் பல்வேறு விவகாரங்களைத் தாம் திறந்த மனப்பான்மையுடன் கையாள்வதாக அமைச்சர் கூறினார். இந்தத் தீபத்திருநாளை இந்துக்கள் அமைதியுடனும் சுபிட்சத்துடனும் கொண்டாடி மகிழ வேண்டும். இந்த நன்னாள் அனைவரின் வாழ்க்கையில் புத்தொளியை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட ஜுரைடா அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்..

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.