SELANGOR

இளைஞர், விளையாட்டு துறையுடன் ஒத்துழைக்க சிலாங்கூர் தயார்!

16 அக்டோபர் 2019, 8:26 AM
இளைஞர், விளையாட்டு துறையுடன் ஒத்துழைக்க சிலாங்கூர் தயார்!

ஷா ஆலாம், அக். 16-

2020 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது போல் இளைஞர் மற்றும் விளையாட்டு துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வாயிலாக சிலாங்கூர் மாநில அரசாங்கம் அதிக நன்மை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசாங்கம் சிலாங்கூரில் மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களை ஒருங்கிணைக்க இளைஞர் மற்றும் விளையாட்டு துறையுடன் ஒத்துழைக்க மாநில அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாக இளம் தலைமுறையினர் மற்றும் விளையாட்டு மற்றும் மனித மூலதன மேம்பாட்டு துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒத்மான் கூறினார்.

"விளையாட்டு துறையின் மேம்பாட்டிற்காக மத்திய அரசாங்கம் அறிவித்த பட்ஜெட்டை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வரவேற்கிறது. நாட்டின் விளையாட்டு துறை வளர்ச்சி மீது மத்திய அரசாங்கம் கொண்டுள்ள பரிவையே இது காட்டுகிறது" என்றார் அவர்.

" பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கான ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட அளவு நிதி சிலாங்கூர் மாநிலத்தை வந்தடையும் என்று நம்புகிறோம். இம்மாநிலத்தில் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களை ஒருங்கிணைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் " என்று சிலாங்கூர் கினியிடம் அவர் விவரித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.