RENCANA PILIHAN

மந்திரி பெசார்: 2020 வரவு செலவுத் திட்டத்தில் புதிய கல்வி திட்டங்கள்

3 அக்டோபர் 2019, 11:56 PM
மந்திரி பெசார்: 2020 வரவு செலவுத் திட்டத்தில் புதிய கல்வி திட்டங்கள்
மந்திரி பெசார்: 2020 வரவு செலவுத் திட்டத்தில் புதிய கல்வி திட்டங்கள்

கோம்பாக், அக்டோபர் 4:

எதிர் வரும் 2020 வரவு செலவுத் திட்டத்தில் மாநில அரசாங்கம் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் புதிய கல்வி திட்டங்கள் அறிவிக்கப்படும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார். இந்த புதிய முயற்சியின் மூலம் சிறந்த பட்டதாரிகள் அரசாங்கம் மற்றும் தனியார் துறையில் வேலை வாய்ப்புகளை பெற முடியும் என்று அவர் விவரித்தார்.

" இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் சிறந்த பலன்களை நாம் அடைய முடியும் என எதிர் பார்க்கின்றேன். நன்கு படித்தவுடன் வெளிநாட்டில் வேலை செய்வதை நாம் தடுக்க வேண்டும். வெளிநாட்டில் தங்கி வேலை செய்வதால் நாட்டிற்கு பேரிழப்பாக இருக்கும்," என்று எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு அமிரூடின் ஷாரி வலியுறுத்தினார்.

[caption id="attachment_356503" align="aligncenter" width="500"] Amirudin Shari menyampaikan cenderamata kepada pelajar sempena Majlis bacaan Yassin & solat hajat perdana bagi pelajar bakal menduduki peperiksaan SPM 2019 di Masjid Jamek Al-Amaniah, Batu Caves pada 3 Oktober 2019. [/caption]

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.