RENCANA PILIHAN

சிலாங்கூரில் 74,935 மாணவர்கள் பிடி3 தேர்வை எழுதுகின்றனர்

2 அக்டோபர் 2019, 5:14 AM
சிலாங்கூரில் 74,935 மாணவர்கள் பிடி3 தேர்வை எழுதுகின்றனர்

ஷா ஆலம், அக்.2-

சிலாங்கூரில் நேற்று தொடங்கி 326 தேர்வு மையங்களில் மொத்தம் 74,935 மாணவர்கள் பிடி3 தேர்வை எழுதுகின்றனர்.

அந்த எண்ணிக்கையில் அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெற்ற பள்ளிகளுக்காக 267 தேர்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று சிலாங்கூர் கல்வி இலாகா துணை இயக்குநர் முகமது ராட்ஸி அப்துல்லா கூறினார்.

இதனிடையே, கல்வில் அமைச்சின் 267 தேர்வு மையங்கள் தனியார் பல்ளி மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள வேளையில், சிலாங்கூர் இஸ்லாமிய சமய பள்ளி 21 மையங்களும் சுயமாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 5 மையங்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலும் 2 தேர்வு மையங்கள் தடுப்பு காவல் மையங்களிலும் திறக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சொன்னார்.

மற்றொரு நிலவரத்தில், நாடு முழுவதிலும் 4 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் செவ்வாய்க்கிழ்மையன்று ஆங்கில மொழி தேர்வின் தாள் 1 மற்றும் 2ஐ எழுதினர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.