SELANGOR

சிறந்த வர்த்தக சின்ன விருது: கேடிஇபிடபள்யூம் சேவைக்கு ஓர் அங்கீகாரம்!

27 செப்டெம்பர் 2019, 2:20 AM
சிறந்த வர்த்தக சின்ன விருது: கேடிஇபிடபள்யூம் சேவைக்கு ஓர் அங்கீகாரம்!

கோலாலம்பூர், செப்.27-

2019ஆம் ஆண்டின் சிறந்த வர்த்தக சின்னம் என்று விருதை பெற்றதன் மூலம் கேடிஇபி கழிவு நிர்வாக நிறுவனம் மற்றொரு ஒரு வரலாற்றை பதிவு செய்துள்ளது.

இங்குள்ள தெ மெஜஸ்டிக் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த கழிவுப்பொருள் நிர்வாக நிறுவனப் பிரிவில் இந்நிறுவனம் இவ்விருதைத் தட்டிச் சென்றது.

சிலாங்கூரில் பொது துப்புரவு மற்றும் திடக் கழிவு பொருட்கள் அகற்றும் நிர்வாகத்தை சிறந்த முறையில் மேற்கொண்டதற்காக கேடிஇபிடபள்யூம் நிறுவனத்திற்கு இந்த அங்கீகாரம் முதன் முறையாக அளிக்கப்பட்டது என்று அதன் ஊடக மற்றும் பொது தொடர்பு பிரிவு தலைவர் மாஹ்ஃஉஸா தார்மிடி கூறினார்.

“இந்த அங்கீகாரமானது தரமான சேவையை சிலாங்கூர் மக்களுக்கு நாங்கள் தொடர்ந்து வழங்குவதற்கு அளிக்கப்படும் ஓர் ஊக்குவிப்பாக அமைந்துள்ளது”. என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.