SELANGOR

2019 சிலாங்கூர் சபர் விளையாட்டு போட்டி: விலையுயர்ந்த பரிசுகள் காத்திருக்கின்றன!

23 செப்டெம்பர் 2019, 5:52 AM
2019 சிலாங்கூர் சபர் விளையாட்டு போட்டி: விலையுயர்ந்த பரிசுகள் காத்திருக்கின்றன!

ஷா ஆலம், செப்.23-

வரும் அக்டோபர் 26, 27ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கு 2019 சிலாங்கூர் சைபர் போட்டியில் மாநில அரசு 215,000 வெள்ளி மதிப்பிலான ரொக்க பரிசுகளை வழங்கவிருக்கிறது.

சென்டரல் ஐ சிட்டியில் நடைபெறவிருக்கு இப்போட்டியில் டோத்தா 2, பிளேயர் அன்நோவ்ன் பெட்டல்கிரவுண்ட்ஸ் மொபைல், ஃபிஃபா20 மற்றும் தெக்கென் 7 ஆகிய 4 போட்டிகள் இடம்பெறவுள்ளன என்று இளையோர் மற்றும் விளையாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒஸ்மான் கூறினார்.

இளையோர் மத்தியில் மின் விளையாட்டு துறையில் புதிய விளையாட்டாளர்களை உருவாக்க மாநில அரசு கடப்பாடு கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

நடைபெறும் நான்கு மின் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து 3000 விளையாட்டாளர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.