BMEN中文தமிழ்
Media SelangorMedia Selangor
அண்மைய செய்திகள்
சிலாங்கூர்
தேசியம்
உலகம்
வர்த்தகம்
கல்வி செய்திகள்அறிவுச் சுடர்
விளையாட்டு
ஆன்மீகம்அறிவியல்மருத்துவம்கட்டுரைநேர்காணல்பட விளக்கம்விளக்கப்படம்
நாளிதழ்
LiveTV

அன்வார்: இனரீதியான திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
NATIONAL

அன்வார்: இனரீதியான திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

admin
9 செப்டெம்பர் 2019, 2:06 AM
அன்வார்: இனரீதியான திட்டங்களை மறுசீரமைப்பு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்

கோலாலம்பூர், செப்டம்பர் 8:

புதிய பொருளாதாரக் கொள்கை போன்ற இன ரீதியான பொருளாதாரத் திட்டங்கள் இனி மறு சீரமைக்கப்பட்டு, அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய, ஏழ்மையை ஒழிப்பது ஒன்றையே இலக்காகக் கொண்ட புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

கடந்த காலத் திட்டங்கள் தோல்வியில் முடிந்திருப்பது தெளிவாகத் தெரிவதால், அதன் காரணமாக நாட்டில் மலாய்க்காரர்களிடையே இன்னும் அதிக அளவில் ஏழ்மை நிலை இருப்பதாலும், அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு இதை உணர்ந்து மாற்றுத் திட்டங்களை அமுலாக்க வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்தார்.

பொருளாதாரத் திட்டமிடல் பிரிவின் அமைச்சராக டத்தோஸ்ரீ அஸ்மின் அலி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதத்தில் ஐக்கிய நாடுகள் மன்றத்தைச் சேர்ந்த பேராசிரியர் அல்ஸ்டன் வழங்கிய ஆய்வறிக்கையில் மலேசியாவின் ஏழ்மை நிலை மோசமாக இருப்பதை அவர் குறிப்பிட்டிருப்பதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.

உதாரணமாக, போர்ட்டிக்சனில், மலாய் கம்பங்கள், இந்தியர் வாழும் தோட்டங்கள், சீனர்களின் மீன்பிடிக் கிராமங்கள், பூர்வகுடி குடியிருப்புகள் என எங்கு சென்றாலும் ஏழ்மை நிலை மிக மோசமாக இருப்பதைக் கண்டதாகவும் அன்வார் கூறினார். அன்வார் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

சீன, இந்தியர் சங்கங்களும் இனி இன ரீதியான மேம்பாட்டுத் திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், அனைத்து இனங்களையும் உள்ளடக்கிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அன்வார், மலாய் இனத்தினரும் தங்களின் மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

selangor

கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்

n.pakiya
18 அக்டோபர் 2020
கடல் பெருக்கை சமாளிக்க தடுப்பணைகள் வலுப்படுத்தப்படும்
selangor

கோவிட் 19க்கு எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு

n.pakiya
18 அக்டோபர் 2020
கோவிட் 19க்கு  எதிரான போராட்டத்தில் போலீசார் மற்றும் சிறை வார்டன்- முன்னணி சேவையாளர்கள் அதிகம் பாதிப்பு
selangor

கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது

n.pakiya
18 அக்டோபர் 2020
கவனம் கோவிட் 19 நோய்த்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கிறது
selangor

பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தில் பல இனச் சமயம் உட்பட இதர துறைகளின் நிபுணர்களும் இடம்பெற வேண்டும்.

n.pakiya
17 அக்டோபர் 2020
பாதுகாப்பு ஆலோசனை மன்றத்தில் பல இனச் சமயம் உட்பட இதர துறைகளின் நிபுணர்களும் இடம்பெற வேண்டும்.
NATIONAL
Optional

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
மற்றும் வீடியோக்கள்
MidRec
Media SelangorMedia Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Media Selangor Sdn. Bhd.
Level 11, Menara Bank Rakyat No. 1, Jalan Indah 14/8, Seksyen 14 40000 Shah Alam Selangor Darul Ehsan03-5523 485603-5523 5856www.mediaselangor.com.my
அட்டவணை
மின்னஞ்சல்:editor@mediaselangor.comவிற்பனை:marketing@mediaselangor.comவிற்பனை:sales@mediaselangor.com
____