NATIONAL

துன் மகாதீர்: என்னை யாரும் தனிமைப் படுத்தவில்லை; பாக்காத்தான் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது

27 ஆகஸ்ட் 2019, 1:02 PM
துன் மகாதீர்: என்னை யாரும் தனிமைப் படுத்தவில்லை; பாக்காத்தான் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது

கோலா லம்பூர், ஆகஸ்ட் 26:

பக்கத்தான் ஹரப்பான் உள்ளுக்குள் உடைந்து கொண்டிருப்பதாக அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறியிருப்பதைப் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நிராகரித்தார்.

தம்மை ஆதரவற்ற “தனி ஆள்” என்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமும் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கும் தம்மைப் பதவி இறக்கத் திட்டமிடுவதாகவும் ஹமிடி கூறியதையும் பக்கத்தான் ஹரப்பான் தலைவர் புறந்தள்ளினார்.

“நான் தனி ஆளா இல்லையா என்பதை நீங்களே பார்க்கலாம். நான் எங்கு சென்றாலும் மக்கள் வந்து வணக்கம் சொல்லி ஆதரவு தெரிவிக்கிறார்கள்.

“கட்சியிலும் அமைச்சரவையிலும் கடும் விமர்சனங்களுக்கு இலக்கான விவகாரங்களில்கூட எல்லாரும் சேர்ந்துதான் முடிவெடுக்கிறோம்”, என்றாரவர். மகாதிர் இன்று கோலாலும்பூரில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் நிகழ்வுக்கு வருகை தந்தபோது செய்தியாளர்களிடம் பேசினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.