NATIONAL

இனவாரியாக வரி வசூலிப்பா? -உள்நாட்டு வருமான வரி வாரியம் மறுப்பு

27 ஆகஸ்ட் 2019, 2:55 AM
இனவாரியாக வரி வசூலிப்பா? -உள்நாட்டு வருமான வரி வாரியம் மறுப்பு

கோலாலம்பூர், ஆக.27:

இனவாரியாக வரி வசூலிப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டை உள்நாட்டு வருமான வரி வாரியம் மறுத்தது.

வாரியம் நிர்ணயித்துள்ள நடைமுறைகளைத் தவிர்த்து இன வாரியான தகவல் தரவுகளை இவ்வாரியம் கொண்டிருக்கவில்லை என்று அறிக்கை வழி அது தெரிவித்தது.

தனிநபர் வருமான வரி மற்றும் நிறுவன வரி என்ற முறையில் மட்டுமே வரி செலுத்துவோரின் தகவல் மற்றும் தரவு வகை பிரிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை தெளிவுப்படுத்தியது.

மொத்தம் 8 வகையாக பிரிக்கப்பட்டுள்ள தகவல் தரவுகளை www.hasil.gov.my எனும் அகப்பக்கம் மற்றும் நிதியமைச்சின் ஊடக தகவல் ஏட்டிலும் பொது மக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.