NATIONAL

நன்றி கூறும் இயக்கத்தை முன்னிட்டு ஃபயர் ஃபிளை நிறுவனத்தின் சிறப்பு கழிவு

27 ஆகஸ்ட் 2019, 2:28 AM
நன்றி கூறும் இயக்கத்தை முன்னிட்டு ஃபயர் ஃபிளை நிறுவனத்தின் சிறப்பு கழிவு

கோலாலம்பூர், ஆக.27-

மலேசிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பல்வேறு உள்நாட்டு பயணங்களுக்கு 60 விழுக்காடு வரை கட்டண கழிவை வழங்குவதோடு வார இறுதி நாள் சுற்றுலா திட்டங்களையும் வழங்க ஃபையர் ஃபளை விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தேசிய தின மாதம், தேசிய தினம் மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு பல்வேறு விமானப் பயணச் சுற்றுலாத் திட்டங்களுக்கு 50 விழுக்காட்டு கழிவை இந்நிறுவனம் வழங்கவிருக்கிறது.

“செப்டம்பர் 6ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் மலேசிய விமானப் பயண மற்றும் சுற்றுலா நிறுவன முகவர்களின் (மாட்டா) கண்காட்சியில் ஃபயர் ஃபிளை பங்கெடுக்கவிருப்பதாக” அதன் அறிக்கை தெரிவித்தது.

மேலும், 2019 உலக தூய்மை தினத்தை முன்னிட்டும் தனது நிறுவனத்தின் சமூக கடப்பாடாகவும் ஃபயர் ஃபிளை இந்நடவடிக்கையை மேற்கொள்ளவிருப்பதாக அது கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.