SELANGOR

யுஎஸ்ஜே கிட்ஸ் இல்ல சிறார்களை சட்டமன்ற உறுப்பினர் உற்சாகப்படுத்தினார்

15 ஆகஸ்ட் 2019, 12:41 AM
யுஎஸ்ஜே கிட்ஸ் இல்ல சிறார்களை சட்டமன்ற உறுப்பினர் உற்சாகப்படுத்தினார்

சுபாங் ஜெயா, ஆக.14-

தீயணைப்புப் படை வீரர்களின் பணிகளையும் நடவடிக்கைகளையும் காணும் வாய்ப்பு பெற்ற யுஎஸ்ஜே கிட்ஸ் சிறார்கள் மகிழ்ச்சியில் மூழ்கினர்.

தீயணைப்புப் படையினரின் பணி தீயை அணைப்பத்தோடு நின்று விடாது மேலும் பல பணிகளையும் அவர்கள் ஆற்றுகின்றனர் என்பதை வெளிப்படுத்துவதற்காக இந்நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் மிஷெல் இங் மெய் ஸீ கூறினார்.

“இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தீயணைப்பு படையின் கடமைகள் புரிந்திருக்கும். அதோடு அவர்களில் ஒரு சிலருக்கு எதிர்காலத்தில் தீயணைப்பு வீரர் ஆக வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சியை தாமும் சுபாங் ஜெயா சமூக சேவை மைய தொழில்துறை பயிற்சி மாணவர்கள் சிலரும் இணைந்து ஏற்பாடு செய்ததாக மிஷெல் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.