NATIONAL

மலேசிய பொருளாதாரம் சீரடைகிறது!

4 ஆகஸ்ட் 2019, 2:03 AM
மலேசிய பொருளாதாரம் சீரடைகிறது!

கோலாலம்பூர், ஆக.2-

நாட்டின் முக்கிய பொருளாதார குறியீடு சீரடையும் தடத்தில் இருப்பதால், மலேசிய பொருளாதார முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று எம்ஐடிஎஃப் அமானா முதலீட்டு நிறுவனம் தெரிவித்தது.

இவ்வாண்டு மே மாதத்தில் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையானது தயாரிப்புத் துறையின் விற்பனை மதிப்பின் இறக்கத்தினால் ஏற்பட்டது என்று அது கூறியது.

“அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வணிகப் போர் மற்றும் ஜப்பானுக்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கருத்து வேற்றுமை ஆகியவற்றின் காரணமாக ஏற்றுமதி சாந்ர்த துறை மற்றும் தயாரிப்புத் துறை ஆகிய துறைகளின் பொருளாதாரம் நலிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.”

ஆயினும், இவ்வாண்டின் இரண்டாம் அரையாண்டில் அத்தியாவசிய பொருட்களின் வில்லை கட்டம் கட்டமாக உயர்வதினாலும் நாட்டின் தேவை வலுவாக இருப்பதாலும், நாட்டின் பொருளாதாரம் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.