RENCANA PILIHAN

சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு அரசியல் நோக்கம் கொண்டதல்ல! - அமிருடின் ஷாரி

2 ஆகஸ்ட் 2019, 4:57 AM
சட்டமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு அரசியல் நோக்கம் கொண்டதல்ல! - அமிருடின் ஷாரி

ஷா ஆலம், ஆக.2-

சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனான தனது சந்திப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்ற கூற்றை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி வன்மையாக மறுத்தார்.

அச்சந்திப்பானது வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை (கேபிகேடி) அமைச்சின் திட்டத்தைப் பற்றியதாகும் என்றார் அவர்.

“அதே நேரத்தில், அந்த விளக்கக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை.”

“அந்தக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பகுதி குறித்து அதன் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகருக்கு விளக்கமளித்தால் நான் அதில் பங்கேற்கவில்லை.”.

முன்னதாக, கெ அடிலான் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலிக்கு ஆதரவாகப் பேசியதனால் அமிருடினின் மந்திரி பெசார் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதனிடையே, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை வாரியத்திடமிரும் இருந்து தாம் கடிதம் ஏதும் இதுவரை பெறவில்லை என்று அமிருடின் தெரிவித்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.