NATIONAL

நான்கு நெடுஞ்சாலை நிறுவனங்களை மீட்பதற்கான மதிப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை

1 ஆகஸ்ட் 2019, 5:28 AM
நான்கு நெடுஞ்சாலை நிறுவனங்களை மீட்பதற்கான  மதிப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை

கோலாலம்பூர், ஆக 1:

கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் நான்கு நெடுஞ்சாலை குத்தகை நிறுவனங்களை மீட்டுக் கொள்வதற்காக அரசாங்கம் பரிந்துரை செய்த 6.2 பில்லியன் வெள்ளி இறுதியான மதிப்பு அல்ல என்று துணை நிதியமைச்சர் டத்தோ இஞ்ஜீனியர் அமிருடின் ஹம்சா தெரிவித்தார்.

உண்மையான மதிப்பு நிர்ணயிக்கப்படுவதற்கு முன்பு அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அமிருடின் குறிப்பிட்டார்.

“இந்த கட்டாய நடவடிக்கை வாயிலாக அதன் மதிப்பு மிகக் குறைவாகவோ அல்லது மிகவும் அதிகமாகவோ இருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். ஆகையால், அந்த மதிப்பு இறுதியானது அல்ல” அன்று 2019 இஸ்லாமிய நிதி புத்தாக்க விழாவைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் அவர் பேசினார்.

தேர்தல் கொள்கை அறிக்கையின்படி டோல் கட்டனத்தைக் குறைப்பது மற்றும் முற்றாக அகற்றுவதை உறுதிப்படுத்துவதே பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று துனையமைச்சர் மேலும் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.