ஷா ஆலம், ஜூலை 29-
சிலாங்கூர் மாநிலத்தில் 2018ஆம் ஆண்டு டிசம்பரில் 2.13 பில்லியன் வெள்ளியாக இருந்த மாநில அரசாங்கத்தின் கையிருப்பு இவ்வாண்டு ஜூன் மாதம் 2.38 பில்லியன் வெள்ளியாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தத் கையிருப்பானது ஒருங்கிணைக்கப்பட்ட வரி கணக்கு, ஒருங்கிணைக்கப்பட்ட அறங்காவலர் கணக்கு மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட கடனுதவி கணக்கு ஆகியவற்றின் கூட்டுத் தொகையாகும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.
“இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதி வரையில் பதிவு செய்யப்பட்ட 2.38 பில்லியன் வெள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்ட வரி தொகை 721.19 மில்லியன் வெள்ளியாக இருந்த வேளையில், ஒருங்கிணைக்கப்பட்ட அறங்காவலர் நிதி கணக்கு 1.66 பில்லியன் வெள்ளியாக பதிவு செய்தது” என்றார் அவர்.
இதனிடையே, 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாத கையிருப்பு 2.13 பில்லியன் வெள்ளியாகும் என்று சட்டமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையில் அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.








