RENCANA PILIHAN

3 பகுதிகளில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

23 ஜூலை 2019, 11:55 PM
3 பகுதிகளில் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், ஜூலை 24-

சுங்கை சிலாங்கூரில் டீசல் கசிவினால் ஏற்பட்ட தூய்மைக்கேடு காரணமாக உலு சிலாங்கூர், கோல சிலாங்கூர் மற்றும் கோம்பாக் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட குடிநீர் விநியோகத் தடை புதன்கிழமை காலையில் முற்றாக நீங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதே வேளையில், குடிநீர் விநியோகத் தடை ஏற்பட்ட இதர பகுதிகளில் சீரமைப்புப் பணிகள் ஒட்டுமொத்தத்தில் 98 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு பிரிவு தலைவர் அப்துல் ராவோஃப் அகமது கூறினார்.

கிள்ளான் / ஷா ஆலம் பகுதிகளில் 94 விழுக்காடும் கோலாலம்பூரில் 99 விழுக்காடும் பெட்டாலிங்கில் 96 விழுக்காடும் மற்றும் கோல லங்காட்டின் 97 விழுக்காடும் குடிநீர் விநியோகம் சீரடைந்துள்ளதாக அவர் சொன்னார்.

“அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்ய சீரமைப்பு பணிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.