ஜாக்கர்த்தா , மார்ச் 18-
லோம்போக்கில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில் லிம் சை வா எனும் மற்றொரு மலேசியர் பலியாகிவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனினும், மரணமடைந்த அந்தப் பெண்மணி குறித்து முழுமையான விவரங்கள் இன்று காலை 6 மணி வரை கிடைக்கப்பெறவில்லை என்று மலேசியத் தூதரகம் தெரிவித்தது.
இந்த இயற்கை பேரிடரில் மேலும் ஏழு மலேசியர்கள் காயமடைந்தனர் என்றும் அவர்கள் அனைவரும் லோம்போக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்தோனேசியாவுக்கான மலேசிய துணை தூதர் ஜாம்ஷாரி ஷாஹாரான் கூறினார்.
“லோம்போக் தீமோரில் நேற்று நடந்த நிலநடுக்கத்தில் இரு மலேசியர்கள் உயிரிழந்துள்ள வேளையில் எழுவர் காயமடைந்துள்ளனர். மேலும் 13 பேர் பாதுகாப்பாக உள்ளனர்” என்றார் அவர்.






