SELANGOR

இ – ஸ்போர்ட்ஸ் மீதான தவறான கண்ணோட்டத்தை உரிம வழிகாட்டி மாற்றும்

5 மார்ச் 2019, 6:03 AM
இ – ஸ்போர்ட்ஸ் மீதான தவறான கண்ணோட்டத்தை உரிம வழிகாட்டி மாற்றும்

சுபாங் ஜெயா, மார்ச் 5-

இ-ஸ்போர்ட்ஸ் உரிமம் பெறுவதற்கான வழிகாட்டி அறிமுகப்படுத்தப்படுவதால், இந்த விளையாட்டு மீதான சமுதாயத்தின் எதிர்மறையான கருத்து மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழிகாட்டி அறிமுகம் செய்யப்படுவதன் காரணமாக இந்த விளையாட்டை ஊராட்சி மன்ற அமலாக்கத் தரப்பினர் கண்காணிக்கவும் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கவும் முடியும் என்று ஊராட்சி , பொது போக்குவரத்து மற்றும் புதுக்கிராம மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

சைபர் கஃபேயை சூதாட்ட மையத்துடன் தொடர்புபடுத்தும் தவறானக் கண்ணோட்டத்தைக் களைய இ-ஸ்போர்ட்ஸ் நடத்துநர்களும் மாநில அரசும் இணைந்து செயல்படவுள்ளனர் என்றார் அவர்.

இ – ஸ்போர்ட்ஸ் துறை என்பது ஓர் ஆரோக்கியமான விளையாட்டுத் துறை என்றும் இது ஒரு சூதாட்ட மையம் அல்ல என்பதை பெற்றோர்களுக்கு உணர்த்த இந்நடவடிக்கை அவசியம் என்றும் அவர் சொன்னார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.