Uncategorized @ta

நோ ஓமார் பரப்புரையாளராக வேண்டும் என்றால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யட்டும்!!!

18 ஜனவரி 2018, 8:32 AM
நோ ஓமார் பரப்புரையாளராக வேண்டும் என்றால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யட்டும்!!!
நோ ஓமார் பரப்புரையாளராக வேண்டும் என்றால் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யட்டும்!!!

ஷா ஆலம், ஜனவரி 18:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான சிலாங்கூர் கினியின் செயல்பாடுகளை கேள்வி எழுப்பும் டான்ஸ்ரீ நோ ஓமார் தான் ஒரு அமைச்சர் என்ற வகையில் சிந்திக்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் இளைஞர் அணியின் தொடர்பு பிரிவு இயக்குனரான முகமட் நகிப் நஸாரூடின் வேண்டுகோள் விடுத்தார். சிலாங்கூர் கினி அரசியல் ரீதியாக செய்திகள் வெளியிட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று விவரித்தார். சிலாங்கூர் கினி மாநில அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல் ஊடகம், ஆக சிலாங்கூர் மாநிலத்தின் திட்டங்களை பிரசுரம் செய்து வருகிறது என்றார்.

"   சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின்  நன்முயற்சிகளை அறிமுகப்படுத்தி உள்ளது சிலாங்கூர் கினி. இதனால் நோ ஓமார் 'சினம் கொண்ட சிங்கமாக' மாறி விட்டார். நோ ஓமாரின் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினரின் செய்தியை வெளியிடலாம், ஆனால் மக்களுக்கு தேவையில்லாத அரசியல் கதைகள் கண்டிப்பாக சிலாங்கூர் கினியில் வராது," என்று கூறினார்

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.