PBT

எம்பிகே அபராதத் தொகைகளை ரிம 15-வரை குறைத்தது

11 டிசம்பர் 2017, 6:06 AM
எம்பிகே அபராதத் தொகைகளை ரிம 15-வரை குறைத்தது

கிள்ளான், டிசம்பர் 11:

கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) கார் நிறுத்துமிட அபராதங்களை கிருஷ்மஸ் பெருநாள் கால கழிவாக ரிம 15 வரை குறைத்துள்ளது என்று எம்பிகேவின் தொழில்முறை தொடர்பு பிரிவு தலைவர் நூர்பீஃசா மாஃபீஸ் கூறினார். இந்த சலுகை வருட கடைசி வரை மட்டுமே என்று தெரிவித்தார்.

"   இந்த அபராதத் தொகை சலுகை பொது மக்கள் தகுந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் அபராதங்களை கட்ட முடியாதவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் குறைந்த கட்டணத்தில் செலுத்தலாம்," என்று எம்பிகேவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நோர்பீஃசா கூறுகையில், எம்பிகேவின் தலைமையகத்தில் மற்றும் தெங்கு கிளானா சாலையின் கிளை அலுவலகத்திலும் தகவல்களை அறிந்து கொள்ளலாம் என்று விவரித்தார். கட்டணங்களை தலைமையக அலுவலகம்,தெங்கு கிளானா சாலையின் கிளை, மேரு சந்தை வளாகம், போர்ட் கிள்ளான் பேருந்து நிலையம் மற்றும் காப்பார் நகர அலுவலகம் போன்ற எம்பிகே முகப்புகளில் அபராதங்களை கட்டலாம் என்று கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.