RENCANA PILIHAN

உங்களின் நம்பிக்கையே எனது பலம், மந்திரி  பெசார் அஸ்மின் உருக்கம்

2 அக்டோபர் 2017, 12:55 AM
உங்களின் நம்பிக்கையே எனது பலம், மந்திரி  பெசார் அஸ்மின் உருக்கம்
உங்களின் நம்பிக்கையே எனது பலம், மந்திரி  பெசார் அஸ்மின் உருக்கம்

பத்து மலை, அக்டோபர் 2:

தமது தலைமைத்துவத்தை ஏற்றிருக்கும்  சிலாங்கூர்  மாநில அரசாங்கத்துக்கு சிலாங்கூர் மக்கள் தொடர்ந்து வழங்கிவரும் ஆதரவை  தாம் மதிப்பதாக மாநில

மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முஹமட் அஸ்மின் அலி  தெரிவித்தார். தேர்தலின் வழி அதிகாரத்தை வழங்கிய மக்களின் நம்பிக்கையை மாநிலஅரசாங்கத்தின் தலைமைத்துவம் பெற்றிருப்பதை இது உறுதிப்படுத்துவதாக

அஸ்மின் கூறினார் .

"    சிலாங்கூர் மக்கள் நடப்பு மாநில அரசாங்கத்தின் மேல் நம்பிக்கை

வைத்துள்ளதாக,நான் இந்தியா ஹைதராபாத்தில் இருந்த போது செய்தி கிடைத்தது"

சிலாங்கூர் மக்கள் வைத்திருக்கும் இந்த  நம்பிக்கையால்,  நாம் அனைவரும் இவர்களுக்காக இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும் என்ற உந்துதலைத் தருவதாக

அஸ்மின்  தெரிவித்தார். தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள அல் கைரியா

மசூதியில் நேற்று  ஏற்பாடு செய்யப்பட்ட  மக்கள் கருணை திட்டம் மற்றும் முதலமைச்சருடன் நல்லுறவு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிருபர்களுடன் பேசுகையில் அஸ்மின் இவ்வாறு கூறினார்.

அஸ்மின் மேலும் கூறுகையில், மக்கள் பலனடையும் வகையில்  மாநில மேம்பாட்டுக்காகதானும் , மாநிலத்  தலைமைத்துவமும் பாடுபடும். உதவி தேவைப்படும் மக்களை சிலாங்கூர் அரசாங்கம் கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற

உதவிகளை வழங்க  தொடர்ந்து செயல்படும் என்றார் .

அடுத்த சில வாரங்களில், அஸ்மினும்  மாநில நிதி அலுவலரும் மற்றும் இதர அதிகாரிகளும்,நவம்பர் 3 ம் தேதி தாக்கல் செய்யவிருக்கும்  2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயார் செய்ய கடினமாகச் செயல்படப்போவதாக அஸ்மின் தெரிவித்தார்.

"மக்களுக்கு நேரடித்  தாக்கத்தைக் கொடுக்கும்  வரவு செலவுத் திட்டமாக

இருக்க இதனைத் திட்டமிடுகிறோம் என்றார் அஸ்மின்.

 

IMG_20171001_190258

 

 

 

 

 

 

 

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.